நாட்டில் தற்போது பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் இன்று முதல் ஒரு கிலோகிராம் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு 40 ரூபா வரி விதிக்கப்பட்டதே இதற்குக் காரணம் எனவும் இதனாலேயே பெரிய வெங்காயத்தின் விலை 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் மீதான வரி தாக்கம் உள்நாட்டு வெங்காயத்தின் கேள்வியை அதிகரிக்கச் செய்துள்ளது.
மேலும் அடுத்த சில வாரங்களில் இந்த நிலை தொடருமானால் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை 200 ரூபா வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய வர்த்தகங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Leave a comment