நாட்டின் ஆடைத்தொழில் ஏற்றுமதி மூலமான வருமானம் தொடர்ந்து இரண்டாவது மாதமாகவும் 500 மில்லியன் அமெரிக்கன் டொலரை தாண்டியுள்ளது.
கடந்த ஜுலை மாதத்தில் 522.14 மில்லியன் அமெரிக்கன் டொலர் வருமானமாக கிடைத்துள்ளதுடன் ஜூன் மாதம் ஆடை உற்பத்தித் தொழில் ஏற்றுமதி வருமானமாக 500 மில்லியன் டொலர் கிடைத்துள்ளதாகவும் ஆடைக்ைகத்தொழில் உற்பத்தித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஆடைத்தொழில் ஏற்றுமதி வருமானம் 22.6 வீதத்தால் அதிகரித்துள்ளது. அதற்கிணங்க கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரை ஆடைத்தொழில் ஏற்றுமதி மூலமான வருமானம் 3,314.5 ஆக அதிகரித்துள்ளது.
அது 2021 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 20.4 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி தொடர்ச்சியாக மாதா மாதம் ஆடைத்தொழிற் ஏற்றுமதி மூலமான வருமானம் அதிகரித்து வருவதாகவும் எவ்வாறாயினும் நேற்று முன்தினம் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடு காரணமாக இந்தத் துறை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகலாம் என்றும் ஆடைக்ைகத்தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment