24 65fe24b547b7b
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வேகமாக பரவும் தொற்றுநோய்

Share

இலங்கையில் வேகமாக பரவும் தொற்றுநோய்

“டினியா” எனப்படும் தோல் நிலை படிப்படியாக தொற்றுநோய் வடிவத்தில் உருவாகி வருவதாக தோல் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த தொற்றுநோய் வயது வித்தியாசமின்றி அனைத்து மக்களிடமும் பரவுவதாகவும், பெரும்பாலும் வியர்வை உள்ள இடங்களிலும், தலையைச் சுற்றியும் ஏற்படும் தன்மை இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் விசேட வைத்தியர் ஜனக அகரவிட்ட, விசேட வைத்தியர் இந்திக கரவிட்ட உள்ளிட்ட வைத்தியர்கள் பலரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன், மக்களுக்கு மேலும் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

இந்த நோய் தொற்று நிலை சொறி போல் தோன்றுவதாகவும், அரிப்பு முதன்மை அறிகுறியாக இருப்பதாகவும் வைத்தியக்குழு கூறியுள்ளது.

பொது கழிப்பறைகளை பயன்படுத்தும் போது தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த “டினியா” வகை தொற்று நோய் தற்போது வேறுபட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள ஒருவருக்கு இதுபோன்ற நோய் கண்டறியப்பட்டால், துணிகளை தனி தனியாக வெந்நீரைப் பயன்படுத்தி துவைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பூஞ்சை வெப்பநிலையால் அழிக்கப்படும் என்றும், நாட்டில் இந்நோய்க்கு ஏற்ற 10 வகைக்கும் குறைவான மருந்துகளே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நோய் தொற்றுக்கு வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் மருந்து பயன்படுத்த கூடாது எனவும் வைத்தியக்குழு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...