ranil
இலங்கைசெய்திகள்

உடனடி நிவாரணம் – ஜனாதிபதி பணிப்பு

Share
தற்போதைய பொருளாதார நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைத்து அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, பெரும்போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20 இலட்சம் வறிய குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் வீதம் அரிசி வழங்கவும் தேவையான நிதியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மேலும், 2022 ஏப்ரல் மாதத்தில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற 18,000 பேருக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியப் பணிக்கொடையை கட்டம் கட்டமாக வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

போசாக்கின்மையை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு, உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு என்பவற்றை தொடர்ச்சியாக வழங்கவும் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மற்றும் சமுர்த்தி நிவாரணம் என்பவற்றை தட்டுப்பாடின்றி தொடர்ந்து வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதற்காக சுகாதார அமைச்சுக்கு தேவையான நிதியை துரிதமாக வழங்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...