சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (ஐஎம்எப்) கிடைக்கும் கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளதாகவும் சீனா சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நிதி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களும் தயார் நிலையிலுள்ளதாகவும் சீனாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் சான்றிதழ் கிடைத்தவுடன், சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த மாத இறுதிக்குள், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் வசதிக்கான அனுமதி பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
#SriLankaNews
Leave a comment