8fcd0b4c a6ff0b39 c0c38af9 jaffna teaching hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். போதனா பணிப்பாளருக்கு எதிராக உரிய விசாரணை இல்லையெனில் தொழிற்சங்க போராட்டம்!

Share

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி மீதான சுகாதார அமைச்சின் விசாரணைகள் தொடர்பில் நம்பகத்தன்மையான அவதானிப்புகள் இடம் பெற வில்லை எனின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக யாழ்.போதான வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில், பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு எதிரான விசாரணைகள் நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என சுகாதார அமைச்சு தாய் சங்கத்திற்கு வாய் மொழி மூலம் உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் கூட்டத்தில் “பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மீதான சுகாதார அமைச்சின் விசாரணைகள் தொடர்பில் நம்பகத்தன்மையான அவதானிப்புகள் இடம் பெற வில்லை எனின் மூன்று நாட்களின் பின்னர் கூடும் பொதுக்குழு கூட்டத்தில் தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பில் முடிவெடுக்கப்படும்” என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து யாழ்.போதான வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சுகாதார அமைச்சுக்கு முறைப்பாடு அளித்துள்னர்.

இதேவேளை உயர்கல்விக்காக பிரித்தானியாவிற்கு சென்றிருந்த யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர் த. சத்தியமூர்த்தி, சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் நாடு திரும்பியிருந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுவரை காலமும் பதில் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் நந்தகுமாரன் மீண்டும் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைகளை வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...