“மாகாண சபை என்பது வெள்ளை யானை. இந்தியாவால் பலவந்தமாக திணிக்கப்பட்ட அந்த முறைமை எமது நாட்டுக்கு தேவையில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இன்னும் பலரும் கதைக்கின்றனர். அத்தகையதொரு தேர்தல் எமது நாட்டுக்கு அவசியமில்லை. மாகாணசபை என்பது வெள்ளை யானை. அரசியல் வாதிகளை குஷிப்படுத்துவதற்காகவே தேர்தல் நடத்தப்படுகின்றது. அதன்மூலம் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை.
மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்பதால் தற்போது மாகாணசபை இயங்கவில்லையா ? ஆளுநரின்கீழ் நிர்வாகம் நடக்கின்றது. ஜனாதிபதியின் பிரதிநிதியே அவர். மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் மாகாணசபைக்கான செலவு குறைவடைந்துள்ளது. நாட்டுக்கு சேமிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மாகாணசபை முறைமை எமக்கு அவசியமில்லை. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அது இந்தியாவால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும்.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் பொலிஸ், காணி அதிகாரங்களையும் பகிரவேண்டும். தொடர்ந்தும் அவற்றை ஒளித்து வைத்திருக்கமுடியாது.” – என்றார்.
Leave a comment