இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே அடையாள அட்டை வழங்கப்படவேண்டும்.
இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சிறுவர் உரிமை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள அட்டை இலக்கத்ம் விநியோகிக்கப்பட வேண்டும்.
வயது வந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் போது அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த அடையாள அட்டை பயன்படுத்தப்படுகிறது.
சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் போது மற்றும் அவர்களை அடையாளப்படுத்தும் போது சிரமங்கள் ஏற்படுகின்றன .
எனவே இந்த விடயத்தை செயற்படுத்துவது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
Leave a comment