” அமைச்சரவை கலைக்கப்பட்டாலும், எனக்கு மீள் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்பட்டே அந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒளிப்பதற்கு ஒன்றும் இல்லை. தீர்மானம் எடுப்பதற்கான சட்டப்பூர்வமான அனுமதி எனக்கு உள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக செயற்படுவதற்கான அதிகாரங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசமைப்பின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் வெளியிடப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment