tamilni 378 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் திருமணமான புதுமணப் பெண்ணுக்கு அதிர்ச்சி

Share

கொழும்பில் திருமணமான புதுமணப் பெண்ணுக்கு அதிர்ச்சி

கொழும்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நாளில் கணவர் கொடுத்த 23 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருடிச் சென்றதாக 22 வயது பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

கொழும்பு 12 ஸ்ரீமன் பண்டாரநாயக்க மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், 23 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்திற்கு மேலதிகமாக, 60 லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளதாகவும் அவரது முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி தனது திருமணம் நடைபெற்ற நிலையில் தங்க நகைகளை அலுமாரியில் வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இதில் கணவரால் பரிசாக கொடுக்கப்பட்ட சுமார் 23 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் சுமார் 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனது சொந்த தங்கப் நகைகள் அனைத்தும் பெட்டிகளில் அடைத்து வைத்ததாகவும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் தங்கம் வைத்திருந்த அலுமாரியின் சாவியை ஒரு பையில் வைத்து ஒரு இடத்தில் வைத்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் பணிப்பெண்ணும் தந்தையும் மட்டுமே இருந்ததாகவும், சில மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்ததாகவும், பையில் இருந்த சாவியை தேடி பார்த்தபோது சரியான இடத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தை அலுமாரியின் பூட்டை உடைத்து பார்த்தபோது, ​​அங்கு தங்கப் பொருட்கள் எதுவும் இல்லை என அவர் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...