202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன் கைது!!

Share

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிதாஸ் குடியிருப்பு பகுதியில் காதலித்து திருமணம் முடித்த, மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது காயமடைந்த  ஐந்து மாத கர்ப்பிணியான பெண் உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே  படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

கணவன் மது போதைக்கு அதிகம் பழக்கப்பட்டவர் என்பதனால் அடிக்கடி குடும்பத்தில் சண்டைகள் இடம்பெறும் எனவும்  இதன் விளைவாகவே  மனைவி மீதான துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய நபர் அக்கராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11
இந்தியாசெய்திகள்

வேண்டுமென்றே தாமதமாக சென்ற விஜய்.. வெளியான பரபரப்பு தகவல்கள்

கரூரில் நடந்த தவெக கட்சியின் பேரணிக்கு முன்னர் நாமக்கல்லில் நடந்த விஜய்யின் கூட்டத்தில் அசாதாரண சூழல்...

12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதன்முறையாக மிகவும் அபாயகரமான செயற்கை போதைப்பொருள்

இலங்கையில் முதன்முறையாக, மிகவும் அபாயகரமான செயற்கை தூண்டுதல் போதைப்பொருளான ‘மெஃபெட்ரோன்’ (Mephedrone) கண்டறியப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட குறித்த...

13
இலங்கைசெய்திகள்

ஓரினச் சேர்க்கையாளர்களை இலக்கு வைக்கும் திட்டம்: நாமல் எதிர்ப்பு

ஓரினச் சேர்க்கையாளர்களை இலக்கு வைத்து சுற்றுலா மேம்படுத்தல் செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...

10
இலங்கைசெய்திகள்

அநுரவை விரட்ட நாமல் கொண்டுள்ள அபார நம்பிக்கை

மக்களின் ஆணையை மீறிச் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவர் தலைமையிலான அரசையும் மக்களின் ஆதரவுடன்...