CRIME 9en
இலங்கைசெய்திகள்

மதுபோதையில் தம்பதி மீது கோடாரியால் கொடூர தாக்குதல் – மனைவி பலி கணவன் படுகாயம்

Share

மதுபோதையில் தம்பதி மீது கோடாரியால் கொடூர தாக்குதல் – மனைவி பலி கணவன் படுகாயம்

திருகோணமலை (Trincomalee) பகுதியில் நபரொருவர், மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்தததுடன், கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக் கொடூர சம்பவம் நேற்றிரவு (29.3.2024) திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அக்போபுர -85ம் கட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சிரோமாலா பெர்ணாந்து என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த சந்தேகநபரை, வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் கொண்ட அவர், கணவன் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்ததுடன், கணவன் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கோடாரியால் தாக்கியதாக கூறப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஏ.டபிள்யூ.எம்.விக்ரமசிங்க என்ற சந்தேகநபரை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...