மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார பணியாளர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
நீண்ட நாள்களாக வழங்கப்படாத மேலதிக நேர கொடுப்பனவை விரைவாக வழங்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்து இன்று புதன்கிழமை காலை குறித்த போராட்டம் இடம்பெற்றது.
கடந்த மாதமும் தாம் போராட்டம் மேற்கொண்டிருந்த போதும், தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியை மேற்கொள்ளும் தமக்கு உரிய காலத்தில் மேலதிக நேரத்திற்கான கொடுப்பனவு கிடைக்கவில்லை போன்ற கோரிக்கைகளை முன்னிட்டு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
கடந்த வருடத்துக்குரிய மேலதிக நேரக் கொடுப்பனவு நீண்டகாலத்துக்கு பின்னரே கிடைக்கப்பெற்றதாகவும் இவ் வருடத்திலும் பல மாதங்களுக்குரிய மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும், விரைவாக மேலதிக நேர கொடுப்பனவை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a comment