721187541parliamnet5 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தலைமைப்பதவிகள் எதிரணிக்கு!

Share

நாடாளுமன்றத்தில் மிக முக்கிய இரு குழுக்களான கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவிகளை எதிரணிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது கோப் மற்றும் கோபா குழுக்களுக்கான தலைவர்கள் ஏன் இன்னும் நியமிக்கப்படவில்லை என எதிரணி கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

” சபாநாயகர் வெளிநாடு சென்று நேற்றுதான் நாடு திரும்பினார். அவர் நாடாளுமன்றம் வந்த பிறகு இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று குறிப்பிட்டார்.

” மேற்படி இரு குழுக்களினதும் தலைமைப்பதவி எதிரணிக்கு வழங்கப்படும் வகையில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.” என இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 183
செய்திகள்உலகம்

ஈரான் – அமெரிக்கா இடையே தொடரும் ரகசிய செய்திப் பரிமாற்றம்: பாகிஸ்தான் தூதுக்குழு இன்று தெஹ்ரான் வருகை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றித் தோல்வியடைந்த போதிலும், தெஹ்ரானுக்கும்...

world 182
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு ஆசிகளைப் பெற்றார் ஜனாதிபதி: மகாநாயக்க தேரர்களுடன் விசேட சந்திப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (ஏப்ரல் 15)...

world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...