GettyImages 1229777150
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களுக்கு உல்லாச வாழ்வு; எங்களுக்குப் பட்டினிச் சாவா? – யாழில் சனி அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம்

Share

அரசுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நாளைமறுதினம் சனிக்கிழமை மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாக காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

“உங்களுக்கு உல்லாச வாழ்வு; எங்களுக்குப் பட்டினிச் சாவா? மக்களே வாரீர் கோட்டா – மஹிந்த – பஸில் ஆட்சியிடம் நியாயம் கேட்போம்” என்ற கோஷத்துடன் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வட பிராந்திய செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்துக்கான அழைப்பிதழில், “அரிசி, சீனி, மா, பாண், பருப்பு, மல்லி, மிளகாய் என்ன விலை? மண்ணெண்ணெய், டீசல், பெற்றோல், காஸ் இல்லை ஏன்? எங்கள் வரிப்பணம் எங்கே? வரிசைகளில் காத்திருந்து நாம் வாழ்வைத் தொலைப்பது இன்னும் எத்தனை காலத்துக்கு? தட்டிக் கேட்க அணிதிரள்வோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...