14 23
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கு எதிரணி எம்.பிக்களை சந்திக்கவுள்ள பிரதமர் ஹரிணி

Share

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பபானது, நாளைமறுதினம் (23.05.2025) நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் அரசால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து எழுந்திருக்கும் பிணக்குகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் (28.03.2025) திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதனை உடனடியாக திரும்ப பெறுமாறு அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று (20) பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்திருக்கும் முரண்பாடுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 1.00 மணிவரை நாடாளுமன்றத்தில் தனது தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தின் காணிகளை நிர்ணயம் செய்வதற்காக இலக்கம் 2430 மற்றும் (28.05.2025) திகதியிட்ட இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அந்த மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் காணி நிர்ணயம் தொடர்பாக பிணக்குகள் எழுந்துள்ளன.

குறித்துக் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) மு.ப. 11.00 – பி.ப. 1.00 மணி வரை நாடாளுமன்றத்தின் குழு அறை 01 இல் எனது தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு உங்களது பங்கேற்பினை மிகவும் கௌரவத்துடன் எதிர்பார்க்கின்றேன்” என்று அந்தக் கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...