ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின் ஏற்பட்ட இதயப் பிரச்சினை காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பரிசோதனைகளின் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு மேலும் ஒரு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a comment