பொதுமக்கள் மத்தியில் சூழல் விழிப்புணர்வு, சூழற் கல்வி மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக பசுமை அமைதி விருதுகளை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தாலேயே இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதற்படியாக மாணவர்களிடையே சூழல் பொது அறிவுப் போட்டிப் பரீட்சையினை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப் பரீட்சை இணைய வழியூடாக 03.10.2021 அன்று இரவு 7.00 மணி தொடங்கி 8.00 மணிவரை நடைபெறவுள்ளது.
பல்தேர்வு வினாக்களைக் கொண்ட இப் பரீட்சையில் தரம் 9 முதல் 13 வரை பயிலும் மாணவர்கள் தோற்ற முடியும்.
பரீட்சையில் சித்தி அடையும் அனைவருக்கும் பசுமை அமைதி விருதுச் சான்றிதழ் வழங்கப்படும்.
சிறப்புச் சித்தி அடைபவர்களுக்குச் சான்றிதழோடு பெறுமதி வாய்ந்த பரிசுப் பொதியும், முதல் மூன்று இடங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலத்தினாலான பசுமை அமைதி விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான பரிசுகள் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை நிகழ்ச்சியின்போது வழங்கப்படும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்க நிறுவுனர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
Leave a comment