12
இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை : சற்று முன்னர் வெளியானது இறுதி தீர்மானம்

Share

புலமைப்பரிசில் பரீட்சை : சற்று முன்னர் வெளியானது இறுதி தீர்மானம்

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கசிந்த மூன்று கேள்விகளுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் (Exam Department)சற்று முன்னர் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி.அமித் ஜயசுந்தர (Amith Jayasundara)இன்று (1) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட இந்தத் தீர்மானமானது, பாடசாலை அனுமதிகள் மற்றும் புலமைப்பரிசில்களுக்கான நுழைவாயிலாகச் செயற்படும் அதிக போட்டித்தன்மை கொண்ட பரீட்சையின் நேர்மையை உறுதி செய்வதையும் ஒருமைப்பாட்டைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை : சற்று முன்னர் வெளியானது இறுதி தீர்மானம் | Grade 5 Exam L Exam Department Final Solution

பரீட்சைக்கு முன்னதாக மூன்று கேள்விகள் கசிந்ததாக எழுந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் உள்ளடக்கப்பட்ட 03 வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியிடப்பட்டதாக கூறி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (31) அறிவிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பின்படி, பரீட்சைகள் ஆணையாளர் நடைமுறைப்படுத்துவதற்கான மூன்று பரிந்துரைகள் வழங்கப்பட்டன. அதன்படி,

விடைத்தாள்களுக்கான புள்ளிகளை வழங்கும் போது சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளை நீக்கி மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல்

குறித்த மூன்று கேள்விகளுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்குதல்.

முதலாவது வினாத்தாளுக்காக பரீட்சையை மீண்டும் நடத்துதல்.

இந்த பரிந்துரைகளில், மிகவும் பொருத்தமான நடவடிக்கையை பின்பற்றுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி, ஒவ்வொரு பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தும் போது ஏற்படக்கூடிய பொருத்தமான மற்றும் பெருத்தமற்ற தாக்கங்கள் தொடர்பில் இது மிகவும் நியாயமான மற்றும் பொருத்தமான இலக்கம் 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வினாக்களுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அமைய மதிப்பீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து பெறுபேறுகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...