10
இலங்கைசெய்திகள்

விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவன் யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு!

Share

விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவன் யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் – கார் விபத்தில் சிக்கிய கொழும்பு பல்கலைக்கழக(university of colombo) இறுதியாண்டு மாணவன் ஒருவர் நேற்றையதினம் (31) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

தொடருந்துநிலைய வீதி, வைரவபுளியங்குளம், வவுனியாவைச் (vavuniya)சேர்ந்த சந்திரபோஸ் சஜீகாந் (வயது 23) என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

கடந்த 25ஆம் திகதி தனது வீட்டில் இருந்து நண்பரின் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் இவர் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது குருமன்காடு பகுதியில் வீதியில் நிறுத்தி வைத்திருந்த காருடன் அவரது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 26ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share
தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...