20220102 111815 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நிர்வாகம் தெரியாத வடக்கு மாகாண ஆளுநர்!! – சிறிதரன் எம்.பி

Share

நிர்வாகம் தெரியாத வடக்கு மாகாண ஆளுநர் சாரம் கட்டிய சண்டியன்போல் செயற்பட்டு வருகின்றார் – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சிறிதரன் எம்.பி., வடக்கு ஆளுநர்மீது சரமாரியாக விமர்சனக் கணைகளைத் தொடுத்தார்.

” ஜீவன் தியாகராஜா என பெயர் இருந்தாலும் வடக்கு ஆளுநருக்கு தமிழ் தெரியாது. அவர் தன்னிச்சையாக செயற்படுகின்றார். அதிகாரிகளை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்து, காட்டு தர்பார் நடத்துகின்றார்.

திட்டமிட்ட அடிப்படையில்தான் அவர் தமிழர் பகுதிக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிழக்கு ஆளுநரும் அப்படிதான். இவர்களிடம் முறையிட்டு பயன் இல்லை. ” – எனவும் சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...