1559527502 maavai senathirajah 2
அரசியல்இலங்கைசெய்திகள்

சைவர்கள் உரிமையை அரசு பாதுகாக்க வேண்டும்!

Share

சைவ மக்களுடைய உரிமையை இந்த அரசாங்கம் பாதுக்காக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி ஆலயப் பகுதி அழிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக காட்சியளிக்கிறது. சைவ மக்களுடைய மத உரிமை, அந்த இடத்திற்கு சென்று வழிடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டு இதை யார் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு அந்த இடம் அழிக்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களிலும் இருந்து பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டு அரச அதிபரிடம் தமது கருத்தை சொல்லவுள்ளார்கள். அவர்கள் அந்த கோவிலில் மீண்டும் வழிபட வேண்டும். அந்தக் கோவில் கட்டப்பட வேண்டும். அந்த உரிமையை சைவ மக்களுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் முறையிடுகிறார்கள்.

சில தினங்களுக்கு முன் வெடுக்குநாறி மலை சிவன் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு எதிராக எனது ஆட்சேபனையை ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தேன். அந்த விடயங்களை அனுப்பி வைத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

எமது வேண்டுகோள், சைவ தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த தலங்களை அழித்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சைவ மக்களுக்கும், அவர்கள் வணக்கும் கோவில்களுக்கும் பாதுக்கப்பு வழங்கப்பட வேண்டும் என்று தொலைபேசியில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

இந்த இடம் சைவ மக்களுடைய இடம். அதை சுற்றி இராணுவம், தொல்பொருள் திணைக்களம் இருக்கிறார்கள். அவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தமிழ் மக்களினுடைய அல்லது சைவ மக்களிடைய மத உரிமையை இந்த அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். அழிக்கப்பட்ட ஆலயம் மீள நிறுவப்பட்டு அது பாதுகாக்கப்பட லேண்டும் எனக் கோரினேன் இதனையே மக்களும் ஆர்ப்பாட்த்தின் மூலம் சொல்லியுள்ளார்கள். ஆகவே ஜனாதிபதி அவர்கள் பொறுப்பேற்று செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...