1631974911 Manusha Nanayakkara notified to appear before CID L
இலங்கைசெய்திகள்

அரச உத்தியோகத்தர்கள் வெளிநாடுகளில் பணியாற்ற அனுமதி!!!

Share

அரச உத்தியோகத்தர்கள் வெளிநாடுகளில் பணியாற்ற அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படுமென, இணை அமைச்சரவைப் பேச்சாளர் தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அரச உத்தியோகத்தர்கள் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காகச் செல்லும்போது, அவர்களது ஓய்வூதியம் மற்றும் சேவை மூப்புக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு சுற்றறிக்கையை வெளியிடுவதற்குத் தேவையான ஒழுங்குமுறைகளை சுகாதார அமைச்சும் பொது நிர்வாக அமைச்சும் வகுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து பணம் அனுப்புவதை அதிகரிப்பதன் மூலம், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் துரித வேலைத்திட்டத்தின் கீழ் அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நிதி நெருக்கடிக்கு தீர்வு காணவே பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.

இலவசக் கல்வியில் கற்று வௌிநாட்டில் தொழில் புரிவோருக்கு தமது நாட்டுக்கு உதவ சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜபக்‌ஷவினர் வீட்டுக்கு செல்லும் வரை பணம் அனுப்பமாட்டோம் என்றால் எமது நாட்டு மக்கள் இறக்கும் நிலையே ஏற்படும்.புதிய அரசாங்கத்துக்கு மக்களை வாழ வைப்பதே பிரதானமாகவுள்ளது. மருந்தின்றி மக்கள் இறக்கட்டும், நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரச்சினையை தீர்க்கிறோம் என்று சில கட்சிகள் கருதுகின்றனவா?

இலங்கையர் என்ற வகையில் இந்த பிரச்சினைகளை தீர்க்க அனைவரும் பங்களிக்க வேண்டும். அரசியல் லாபம் பெற முயலக்கூடாது. அனுப்பப்படும் பணத்தை துஷ்பியோகம் செய்ய இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 15
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக ஈரான் – சீனா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான்...

Untitled 14
செய்திகள்உலகம்

லண்டனில் யூத சமூகத்தினருக்காகப் பிரத்யேக பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு

லண்டனில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைத்...

Untitled 13
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகும் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் வசிக்கும் மாலத்தீவினரின் விசா சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு குறித்து ஜனாதிபதி முய்ஸு உறுதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு, கொழும்பில் வசிக்கும்...