எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!
ஆன்மீகம்இலங்கைசெய்திகள்

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

Share

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

பெல்லன்வில விகாரையின் 2023 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளது.

புரதான பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2023 ஆம் ஆண்டின் எசல பெரஹெர நிகழ்வுகள் அரசாங்கத்தின் அனுசரணைடன் இம்முறை இடம்பெறவுள்ளன.

பெல்லன்வில விகாரையின் எசல நிகழ்வுகள் 73 ஆவது முறையாக ஓகஸ்ட் 2 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன.

இதன் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி பெல்லன்வில தம்மரத்தன தேரரின் வழிகாட்டல் மற்றும் அறிவுரையின் கீழ் விகாரையின் எசல பெரஹெர குழுவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

பெரஹெராவிற்காக வருடாந்தம் வளங்களை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இம்முறையும் நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்துவது தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.

1950 ஆம் ஆண்டில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட பெல்லன்வில விகாரையின் புண்ணியதான நிகழ்வு மற்றும் பெரஹெர என்பன மறைந்த ஸ்ரீ சோமரதன நாயக்க தேரரினால் ஆரம்பிக்கப்பட்டதாகும்.

தேசத்திற்கு ஆசி வேண்டி தொடர்ச்சியாக இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...