9 35
இலங்கைசெய்திகள்

புதிய எம்.பிக்களுக்கான வாகனங்கள் தொடர்பில் அரசின் அறிவிப்பு

Share

புதிய எம்.பிக்களுக்கான வாகனங்கள் தொடர்பில் அரசின் அறிவிப்பு

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இதுவரை வாகனங்களை ஒதுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அரசாங்கம் தற்போது சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (25) தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

புதிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம்.

எனினும், அவர்களுக்கு வாகனங்களை எப்போது ஒதுக்குவது என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யவில்லை.

அவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள வாகனங்களையும் இறக்குமதி செய்ய மாட்டோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை குறைக்க புதிய அரசு முடிவு செய்துள்ள நிலையில் வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...