Susil and mahinda
இலங்கைஅரசியல்செய்திகள்

சுசிலை பதவி நீக்கிய கோட்டா: தொலைபேசியில் பேசிய மகிந்த!

Share

பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசில் பிரேமஜயந்தவுடன், பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்கஸவினால் அமைச்சுப் பதவியிலிருந்து நேற்று நீக்கியிருந்தார்.

பதவி நீக்கப்பட்டதன் பின்னர், பிரதமர் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியதாக சுசில் பிரேம ஜயந்த தகவல் வெளியிட்டுள்ளார்.

சுசில் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று மாலை முறைப்படி எழுத்து மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசில், தனது அரசியலுக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகவும், புதிய பயணத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...