new sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவும் மஹிந்தவும் உடன் பதவி விலக வேண்டும்! – சஜித் வலியுறுத்து

Share

“இந்த ஜனாதிபதி அல்லது பிரதமரின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாடு வெளிச்சத்துக்குப் பதிலாக இருளை நோக்கியே செல்கின்றது. எனவே, மக்களின் கோரிக்கைக்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்கு எதிரானதும் மற்றும் பிரதமர் தலைமையிலான அரசுக்கு எதிரானதுமான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் உடனடியாக வாக்கெடுப்புக்கு வரவேண்டும்.

புதிய பிரதி சபாநாயகரை உடனடியாக நியமிக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நியாயமான வரிக் கொள்கை பற்றி எனக் கூறும்போது கைதட்டுபவர்கள், இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டு வந்த கோடீஸ்வரர்களுக்கு வரிச்சலுகை வழங்கும்போதும் கைதட்டுவார்கள்.

கோடிக்கணக்கான டொலரை நாட்டுக்கு இழக்கச் செய்த பண்டோரா திருடர்களிடமிருந்து உடனடியாகப் பணத்தை மீட்குமாறுக் கோரிக்கை விடுக்கின்றோம்.

நலன்புரித் திட்டங்களை அரசு கொள்ளையடிக்கக்கூடாது. சர்வதேச நன்கொடை மாநாடொன்றை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2015ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கியது தவறு என அரசு கூறுவதைக் கண்டிக்கின்றோம். சம்பள உயர்வால் அரசுக்கு வருமானம் இழக்காது.

அரசின் 30 மாத கால தாமதச் செயற்பாடுகளாலேயே நாடு இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றாவது உலக நாடுகளுடன் கொடுக்கல் – வாங்கல்களை முன்னெடுக்குமாறு அரசைக் கோருகின்றோம்” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...