2020 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
பரீட்சை இடம்பெறும் போது முறைகேடு நடைபெற்றது என எழுந்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி ஆள்மாறாட்டத்தில் பரீட்சைக்கு தோற்றியமை,கையெழுத்து மாற்றம், விடைத்தாள் பரிமாற்றம், அலைபேசி வைத்திருந்தமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்துக்கு 4174 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் ஆராய்ந்ததில் 3 ஆயிரத்து 967 பேரது பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்களை அழைப்பதற்கான திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment