எரிவாயு அடுப்பு வெடித்த நிலையில், பெண் கூலித் தொழிலாளியின் வீடு எரிந்து சாம்பலான சம்பவம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில், இன்று (06) மதியம், எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
தரவான் கோட்டைப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவரின் வீட்டில், எரிவாயு அடுப்பு வெடித்தமையைத் தொடர்ந்து குறித்த பெண், அதிர்சியின் காரணமாக மயக்கம் அடைந்த நிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த பெண், வீட்டில் தனிமையில் வசிப்பதுடன், பனம் பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தற்போது வீடு முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளது. மன்னார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நகர சபை அதிகாரிகள் மற்றும் பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று, மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
#SrilankaNews
Leave a comment