கொழும்பு, ஆமர்வீதி பகுதிக்கு சமையல் எரிவாயு ஏற்றிவந்த லொறிலிருந்து சுமார் 100 ‘கேஸ் சிலிண்டர்’கள் களவாடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளும் இடம்பெறுகின்றன.
தமக்கு சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி ஆமர்வீதி பகுதி மக்கள் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். நேற்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்றது.
இந்நிலையில் அப்பகுதிக்கு சமையல் எரிவாயுவை விநியோகிக்க வந்த லொறிக்குள் ஏறிய சிலர், சிலிண்டர்களை எடுத்துச்சென்றுள்ளனர். சுமார் 100 சிலிண்டர்கள்வரை களவாடப்பட்டுள்ளன என்று லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, சந்தைக்கு விநியோகிப்பதற்கு போதுமானளவு எரிபொருள் கைவசம் இல்லை எனவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே விநியோகிக்கப்படும் என லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment