18 14
இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்! பொலிஸாரால் தேடப்படும் செவ்வந்தியின் பாட்டி வெளியிட்ட தகவல்

Share

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம்! பொலிஸாரால் தேடப்படும் செவ்வந்தியின் பாட்டி வெளியிட்ட தகவல்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபரான செவ்வந்தி என்றப் பெண் கடந்த 3 மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை என்று அவரது பாட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகமொன்றிடம் குறிப்பிடும் போது,

செவ்வந்தி என்னுடை மகளின் மகள். என்னுடை பேர்த்தி. அவர் கடந்த மூன்று மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை.

இந்தவீட்டில் நான் எனது மகள்(செவ்வந்தியுடைய அம்மா) மற்றும் அவரது மகன்(செவ்வந்தியுடைய தம்பி) ஆகியோர் வசித்து வருகின்றோம்.

நேற்றையதினம் எமது வீட்டிற்கு வந்த பொலிஸார் செவ்வந்தியுடைய தம்பியை வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதனையடுத்து வெளிவந்த செய்திகளின் ஊடாகவே சம்பவத்தை நான் அறிந்து கொண்டேன்.

மேலும், எனது பேத்தி கடந்த மூன்று மாதங்களாக வீட்டிற்கு வரவில்லை. போதைப்பொருள் வியாபாரம் மேற்கொண்டதற்காக அவர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...