இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் ஆகியவற்றின் அரசரணையுடன் வடமாகாண பண்பாட்டு அலுவலக திணைக்களத்தின் ஏற்பாட்டுடன், சர்வதேச இந்து குருமார் ஒன்றியம் – குருகுலம் வழங்கும் இந்துக் குருமார்களுக்கும் மாணவர்களுக்குமான கணபதி ஹோம பயிற்சி நெறி அரங்கம் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வு நாளை 25ஆம் தேதி மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரை ஊரெழு மேற்கு, மீனாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் இடம் பெற உள்ளது.
நிகழ்வில் அனைத்து சிவாச்சாரியார்களையும் அந்தண பெருமக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஒழுங்கமைப்பாளர்கள் வேண்டி நிற்கின்றனர்.
#SriLankaNews
Leave a comment