tamilni 219 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்க பரப்புரையாளருக்கு பெருந்தொகை டொலர் செலுத்தியுள்ள மகிந்த!

Share

அமெரிக்க பரப்புரையாளருக்கு பெருந்தொகை டொலர் செலுத்தியுள்ள மகிந்த!

மகிந்த ராஜபக்ச நிர்வாகத்துடன் தொடர்புகளை வைத்திருந்த அமெரிக்க பரப்புரையாளரிடமிருந்து, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக, அமெரிக்காவின் தூதுவராக இருந்த பாகிஸ்தான் ஊடகவியலாளர் பெண்ணான முனா ஹபீப், பணத்தை பெற்றக்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2015 ஆம் ஆண்டில், மூனா ஹபீப் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இதழியல் திட்டத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

எனினும் அவரால் 100,000 டொலர் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.இதன்போது மகிந்த ராஜபக்சவுடன் தொடர்புகளை கொண்டிருந்த அரசியல் நிர்ணயலாளரான இமாட் சுபேரி, ஊடகவியலாளருக்கு 25,000 டொலர் நிதியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் வரி ஏய்ப்பு, வெளிநாட்டு செல்வாக்கு மற்றும் பிரசார நிதி மீறல்களுக்காக சுபேரி, இப்போது அமெரிக்காவில் 12 ஆண்டு சிறைத்தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.

இதேவேளை 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை தமது கையிருப்பில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன் 2014 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கை அரசாங்கம், அமெரிக்காவின் ஆதரவைப் பெறுவதற்கும், போருக்குப் பிந்தைய பிம்பத்தை சரிசெய்வதற்கும் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இமாட் சுபேரிக்கு பெருந்தொகை டொலர் பணத்தை செலுத்தியுள்ளது.

எனினும் சுபேரி இலங்கை அரசாங்கத்திற்காக என்ன பணிகளை நிறைவேற்றினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
25 684d9895c5fed
உலகம்செய்திகள்

இதுவே தாக்குதலின் ஆரம்பம்.. நெதன்யாகு வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

இனிவரும் காலங்களில் ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிக மோசமானதாக இருக்கும் என இஸ்ரேலிய பிரதமர்...

25 684daa7056229
உலகம்செய்திகள்

திடீரென இரத்து செய்யப்பட்ட அமெரிக்க – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நடத்தப்படவிருந்த குறித்த...

25 684db2d85251f
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. பேரச்சத்தில் உலக நாடுகள்!

மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் சாத்தியமான ஒன்று என ஜேர்மன் அரசாங்கம் எச்சரிக்கை...

25 684db89645eef
உலகம்செய்திகள்

அவசரமாக மத்திய கிழக்கிற்கு பறக்கும் பிரித்தானிய ஜெட் விமானங்கள்! வலுக்கும் போர் பதற்றம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் சில ஜெட் விமானங்கள் அங்கு...