இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஒரு லீற்றர் டீசலின் விலை (அனைத்து வகையான டீசல்) 75 ரூபாவாலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலை (அனைத்து வகையான) 35 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலப்பகுதிக்குள் லங்கா ஐஓசி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது விலை உயர்வு இதுவாகும்.
அத்துடன், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் முடிவெடுக்கவில்லை. எனினும், பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலை அதிகரிப்பை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எரிபொருள் விலை உயர்வானது, ஏனைய பொருட்களின் விலையிலும் தாக்கம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment