tamilni 370 scaled
இலங்கைசெய்திகள்

சீன நிறுவனத்திற்கு இலங்கையில் அங்கீகாரம்

Share

சீன நிறுவனத்திற்கு இலங்கையில் அங்கீகாரம்

சீனாவின் சினோபெக் நிறுவனத்துக்கு நாட்டிலுள்ள மேலும் ஐம்பது எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(28.09.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் சினோபெக் நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை வழங்கியுள்ளது.

அவற்றில் 145 எரிபொருள் நிலையங்களை பொறுப்பேற்பதற்கு அந்த நிறுவனம் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது.

தற்போது மேலும் 50 எரிபொருள் நிலையங்கள் அமைப்பதற்காக அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த எரிபொருள் நிலையங்களில் எண்ணிக்கையை 200 ஆக மட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லையென குறிப்பிட்டுள்ள அவர், அது தொடர்பில் ஆட்சேபனைகளிருந்தால், வழங்குநர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தங்களை பரிசீலிக்கத் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...

bus deesel
இலங்கை

டீசல் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகள் !

மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயக்கப்படும் பேருந்துகள் மீது காவல்துறை நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளைத்...

canada job
இலங்கை

கனடா மோகம் – பறிபோன எட்டு மில்லியன் ரூபா.

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் கனடா – லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்...

police team
இலங்கை

துரிதமாக இடம்பெறும் இரண்டு தனி காவல்துறையினரின் விசாரணை.

மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவும், மாலபே பொலிஸாரும் இணைந்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர்...