ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கு இந்திய அரசுக்கு சொந்தமான, பாரத் பெற்றோலியம் நிறுவனம் எரிபொருள் நிரப்புவதாக தெரிவித்துள்ளது.
பாரத் பெற்றோலிய நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அதற்கமைய இலங்கையின் சுமார் 100 விமானங்களுக்கு இதுவரை, திருவனந்தபுரம், சென்னை மற்றும் கொச்சி விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.
கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாக, மிகக் குறுகிய அறிவிப்பில், இந்த எரிபொருள் நிரப்புதல் செய்யப்பட்டுள்ளது என்று பாரத் பெற்றோலிய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் இந்த சேவைக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை தனது நன்றிகளை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment