HelloTech qr code 1024x1024 1
இலங்கைசெய்திகள்

இன்று முதல் கியூ.ஆர். முறைக்கு எரிபொருள்!

Share

இன்று (01) முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திரம் அல்லது கியூ.ஆர். முறையின் பிரகாரம் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை நடைமுறையில் உள்ள வாகன இறுதி இலக்கத்திற்கு எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை, டோக்கன் முறை மற்றும் ஏனைய முறைமைகள் இன்று முதல் செல்லுபடியாகாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து முச்சக்கர வண்டிகளும், அந்தந்த பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், பொலிஸ் நிலையத்தினூடாக அவர்களுக்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையத்தை பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின்பிறப்பாக்கிகள்,தோட்டக்கருவிகள், இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் பிற உபகரணங்களை பயன்படுத்துவோர் தேவையான எரிபொருள் வகை, வாரத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தெரிவு ஆகியவற்றை அந்ததந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து ஒவ்வொருவருக்குமான ஒதுக்கீட்டை பெறுவதற்கான சந்தர்ப்பம் வாரம் முழுவதும் கிடைக்கும். எனவே இன்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்று கூட வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...