” சர்வக்கட்சி அரசமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற முதல் சுற்று பேச்சு திருப்திகரமாக அமைந்தது.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
நிதி அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், சர்வக்கட்சி அரசு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி அரசு சம்பந்தமான தமது கட்சியின் யோசனையை சுதந்திரக்கட்சி பிரமுகர்கள், ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
அடுத்தக்கட்ட சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளது.
#SriLankaNews
Leave a comment