unnamed
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடிய நால்வர் கைது!

Share

யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதிகளில் திருடப்பட்ட சுமார் 5 லட்ச ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடிய குற்றச்சாட்டில் 4 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுவான் பகுதிகளில் அண்மைக்காலமாக நீர் இறைக்கும் மின் மோட்டார்கள், நீர் பம்பிகள் திருடப்பட்டு வந்துள்ளன.

இது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் உரிமையாளர்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் அது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடாத்தி வந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் நான்கு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்களிடம் இருந்து சுமார் 5 இலட்ச ரூபாய் பெறுமதியான 7 நீர் இறைக்கும் மின் மோட்டார்களை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...