anura priyadharsana
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்?

Share

முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை, ஜூலை 20 ஆம் திகதி சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு நாட்டின் அரச தலைவராக நடுநிலையான ஒருவரை நியமிக்க வேண்டும் என பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் அபிப்பிராயம் இருப்பதாக அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுவாதின எம்.பி குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அநுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு ஆதரவளிக்க மொட்டு கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரமன்றி பெருமளவிலான சுயேட்சை உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவும் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கேட்ட போது, ​​ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...