இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவை நியமனத்தின்போது அமைச்சுப் பதவிகள் கிடைக்காத ஆளுங்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பலர் நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சுப் பதவிகள் கிடைக்காத காரணத்தால் அவர்கள் அனைவரும் அரசின் மீது அதிருப்தியில் இருக்கின்றனர் எனவும் அறியமுடிகின்றது.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது கட்சியின் தலைமையிடம் இது குறித்து அறிவித்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கும் அவர்கள் தயாராகி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment