3 44
இலங்கைசெய்திகள்

2025 இல் வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

Share

2025 இல் வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

இந்த ஆண்டு 340,000 இலங்கை குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இன்று (23) நடைபெற்ற புதிதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளர் கோசல விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டில், 311,000 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், மேலும் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையை 12% அதிகரிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திட்டங்களை வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விதிமுறைகளை முறையாக நடைமுறைபடுத்திய பின்னர், மக்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப வேண்டும் என்று தவிசாளர் தொடர்ந்தும் கூறியுள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அனுமதிகளைப் பெற்ற சில நிறுவனங்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், அத்தகைய நபர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...

Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...