18 28
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு: மனுஷவின் சகாக்கள் தலைமறைவு!

Share

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு: மனுஷவின் சகாக்கள் தலைமறைவு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வளாகம் மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் அமைச்சுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தரை தளம் ஆகியவற்றை பயன்படுத்தி மனித கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின்( Manusha Nanayakkara) சகோதரர் திசர ஹிரோஷன நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இதனை மேற்கோள் காட்டியே குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மனுஷ நாணயக்காரவுக்கு நெருங்கிய மேலும் சில தரப்பிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மனுஷ நாணயக்காரவின் இணைப்புச் செயலாளராக இருந்த பாக்ய காரியவசம் என்ற நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர், இஸ்ரேல் தொழில் மற்றும் தென்கொரிய வேலைகளை பெற்று தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் சம்பாதித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட நபர் மற்றும் பலர் தற்போது காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருந்த தேசப்பிரிய லியனகே என்பவரும் இந்த மனித கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...