சட்டவிரோத முறையில் கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி கடலில் இறால் பிடியில் ஈடுபட்ட 6 மீனவர்களை கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
அவர்கள் பயன்படுத்திய வலைகளும் மீட்கப்பட்டுள்ளது.
அனுமதிப்பத்திரம் இன்றிய நிலையில் தொழிலில் ஈடுபட்டமை மற்றும் மடியுடன் கூடிய இழுவை வலையைப்பயன்படுத்தியமை, உள்நாட்டு நீர் நிலைகளில் 85Mm அளவை விட குறைந்த வலையைப்பயன்படுத்தமை போன்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர். க.மோகனகுமார் தெரிவித்தார்.
குறித்த ஆறு பேரையும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜெகநாதன் சுபராஜினி முன்னிலையில் ஆஜர் படுத்திய போது 02.05.2023 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
#srilankaNews
1 Comment