செய்திகள்இலங்கை

லொஹானுக்கு எதிராக விசாரணைகள்! – நாமல்

1605415571 namal 2
Share

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. விரைவில் இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கைதிகளின் கோரிக்கைக்கு அமைய  அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

கைதிகளை சந்தித்த நாமல், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு முன்வைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

நாட்டை ஒழுக்கமான நாடாக கட்டியெழுப்பும் நோக்குடனேயே ஜனாதிபதி பதவிக்கு வந்தார்.
அதற்கு எதிராக யாரேனும் வந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க அவர் ஒருபோதும் தயங்கமாட்டார்.

தற்போது சிறைச்சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறைச்சாலையிலுள்ள சி.சி.டி.வி.காட்சிகளை ஒழிக்க முடியாது. அவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் இடம்பெறாது.

இந்த சம்பவம் தொடர்பான அறிக்கை வந்தவுடன் இவ் விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்போம் என அமைச்சர் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...