இலங்கைகாணொலிகள்செய்திகள்பிராந்தியம்

உயிரிழந்த மீனவரின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்!!

Share
Share

மாதகல் கடலில் கடந்த 11.01.2022 அன்று மர்மமான முறையில் உயிரிழந்த மீனவர் எட்வேட் மரியசீலன் அவரது மரணத்திற்கு நீதி வழங்குமாறு கோரி இன்று அவரது இல்லத்திற்கு முன்பாக கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்பு இப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, போராட்டக்காரர்கள் “மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து, மீனவக் குடும்பங்களில் பிள்ளைகள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்து,

Protest 2

கடலில் தொடர்ச்சியாக நடாத்தப்படும் படுகொலைகளை தடுத்து நிறுத்து, உயிரிழந்த மீனவர்களுக்கு இழப்பீட்டை வழங்கு” போன்ற கோசங்கள் எழுப்பி சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெபனேசன் தலைமையில் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் வலி தென்மேற்கு மற்றும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மீனவ அமைப்புகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

மாதகல் கடற்பரப்பில் கடந்த 10ஆம் திகதி இரவு கடற்தொழிலுக்கு சென்ற மீனவரின் படகு விபத்துக்கு உள்ளான நிலையில் சக மீனவர்களினால் மீட்கப்பட்டபோது மீனவரும் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.

சம்பவத்தில் மாதகல் குசுமாந்துறையைச் சேர்ந்த 31 வயதுடைய சேர்ந்த திலீபன் என அழைக்கப்படும் எட்வெர்ட் மரியசீலன் என்ற மீனவர் உயிரிழந்திருந்தார்.

குறித்த படகு விபத்தானது , கடற்படையின் படகு மோதியதாலே ஏற்பட்டது என உள்ளூர் மீனவர்கள் குற்றம் சாட்டிய நிலையில்,

கடற்படையினர் தமது படகு மோதவில்லை என மறுத்தத்துடன் , இந்திய றோலர் படகு மோதி இருக்கலாம் என தெரிவித்து இருந்தனர்.

இந்திய றோலர் படகுகள் கரையை அண்மித்து வர முடியாது எனவும் , படகு விபத்து ஏற்பட்ட பகுதிக்கு றோலர் படகுகள் வருவதற்கான சாத்தியமே இல்லை என உள்ளூர் மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையிலையே மீனவரின் உயிர் இழப்புக்கு நீதி கோரி ஊரவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை உயிரிழந்த மீனவரின் இறுதி கிரிகைகள் இன்றைய தினம் மாதகலில் நடைபெற்று , உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...