கொழும்பில் கரையோர பகுதிகள் சிலவற்றில் சுனாமி அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொழும்பு முதல் காலி, ஹம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில், கடல் அலையின் சீற்றம் சற்று அதிகரித்து காணப்படும்.
இதன்படி, கடல் அலை சுமார் 2 முதல் 2.5 மீட்டர் வரை உயரக்கூடும். இவ்வாறு சீற்றம் பெறும் கடல் அலையானது, கரைக்குள் வரக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
இந்த நிலையில் சில பிரதேசங்களில், சுனாமி ஏற்படும் என கூறப்படும் செய்தி போலியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், சுனாமி ஏற்பல் வாய்ப்புக்கள் உண்டு என வதந்திகள் பரவி வருகின்ற நிலையிலேயே, பொலிஸார் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
Leave a comment