பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமல் தவறான முடிவெடுத்த தந்தை!!

Fingers Death

தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையையிட்டு தந்தை ஒருவர் உயிர்மாய்த்த சம்பவம் களுத்துறை பகுதியில் பதிவாகியுள்ளது.

தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளதாக, உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

3 நாட்களாக வீட்டில் உணவு ஒன்றுமே இல்லை. பிள்ளைகளுக்கு உணவு வழங்க  பணம் தேடி வருவதாக கூறி சென்றார். அவர் வீட்டிற்கு வராமையினால் வீட்டில் இருந்த நாற்காலிகளை விற்று உணவு வழங்கினேன் என தற்கொலை செய்துக் கொண்ட நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

 

 

 

Exit mobile version