துரித உணவு வகைகளின் விலை உயர்வால் பருமன் மற்றும் சர்க்கரை நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்துப் பிரிவு 105 கிராமப்புற சேவை அலுவலர் பிரிவுகளுடன் இணைந்து இந்தக் கணக்கெடுப்பை நடத்தியது.
குறிப்பாக குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், கல்லீரலில் கொழுப்பு சேர்வது போன்ற நோய்கள் வெகுவாக குறைந்துள்ளதையும் இந்தக் கணிப்பு உறுதி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக விலை கொடுத்து நோய்களை வாங்கவேண்டிய தேவை இல்லை. மேலும் இதுபோன்ற உணவு முறைப் பழக்கத்தை அடியோடு தவிர்த்து வந்தால் நம் ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment