Police 1
இலங்கைபிராந்தியம்

பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்ய முயன்ற குடும்பஸ்தர்!

Share

பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் , தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அல்வாய் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே அவ்வாறு உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

குறித்த நபர் தனது மனைவியை தாக்கியதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து , பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் தடுத்து வைத்திருந்தனர்.

அந்நிலையில் குறித்த நபர் தடுப்புக்காவலில் , தனது சாரத்தினை கழட்டி, அதன் மூலம் தூக்குப்போட்டு , தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

அதனை கண்ணுற்ற பொலிஸார் அவரை காப்பாற்றி மந்திகை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...